சட்டமன்ற தேர்தலில் பணிபுரிய மாஜி வீரர்களுக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.3:கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் ஆகிய முப்படையிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் வரும் 6ம் தேதி நடக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு சிறப்பு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிய அழைக்கப்படுகின்றனர். காவல்துறை, முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மற்றும் சிஎஸ்டி கேண்டீன் போன்ற இடங்களில் ஏற்கனவே விருப்ப விண்ணப்பம் கொடுக்கப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் மேற்படி அலுவலகங்களில் இதுவரை விருப்ப விண்ணப்பம் கொடுக்கப்படாத படைவீரர்கள், வரும் 4ம் தேதி(நாளை) காலை 7 மணிக்கு எஸ்பி அலுவலக வளாகத்தில் தேர்தல் பணிபுரிவதற்கு உரிய ஆணையை பெற்றுச் செல்வதற்காக முன்னாள் படைவீரர் என்பதற்கான அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் வருகை புரியலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற 04343-236134, 9677860489 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். நாட்டுக்காக சேவை ஆற்றிய முன்னாள் படைவீரர்கள், இவ்வறிய வாய்ப்பினை பயன்படுத்தி தேர்தல் பணியினை சிறப்பாக செய்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>