போச்சம்பள்ளியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

போச்சம்பள்ளி, ஏப்.3:சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் போச்சம்பள்ளியில் போலீசாருடன் இணைந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். போச்சம்பள்ளியில் கொடி அணிவகுப்பை பர்கூர் டிஎஸ்பி தங்கவேல் துவக்கி வைத்தார்.

இந்த கொடி அணிவகுப்பு போச்சம்பள்ளியில் துவங்கி நான்கு ரோடு, பஸ்நிலையம், வடம்பலம்பட்டி, கொடமாண்டப்பட்டி கூட்ரோடு சந்திப்பு சாலை வரை நடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். இதில், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்ஐ மகேந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Related Stories:

>