வாக்காளர் பட்டியலில் 2 இடத்தில் பெயர் பெண்ணின் வாக்குரிமையை பறித்த தேர்தல் அதிகாரிகள்

தர்மபுரி, ஏப்.3: தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் ஒரு பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடத்தில் உள்ளது. வாக்காளர் பட்டியல் குளறுபடியை சீர் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சட்டமன்ற தேர்தலையொட்டி, கடந்த மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், தர்மபுரி நகராட்சி 10வது வார்டு குமாரசாமிப்பேட்டையில், பாபு மகள் கார்த்திகா என்பவரது பெயர் 2 இடத்தில், ஒரே முகவரியில் இடம் பெற்றுள்ளது. ஆனால், வாக்காளர் அடையாள அட்டையின் எண் வெவ்வேறாக உள்ளது. இதை கண்டுபிடித்து தெரிவித்த அவர், ஒரு இடத்தில் நீக்கம் செய்துவிட்டு, மற்றொரு இடத்தில் வாக்களிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், அதிகாரிகள் ஒரே பெயர் -படத்துடன் 2 இடங்களில் இடம் பெற்றிருந்ததால், அந்த பெண்ணின் வாக்குரிமையை பறித்து விட்டனர். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியை சரி செய்து, கார்த்திகா வாக்களிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>