×

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி, தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ் ஆகியோர் உடன் உள்ளனர். உர விதை குறித்து செயல் விளக்கம்

காங்கயம், ஏப்.3: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் வேளாண் மாணவர்கள் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ்  கிராமங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த பயனுள்ள தகவல்களை செயல்முறை விளக்கத்துடன் விரிவாக விளக்கி வருகின்றனர். இதில், காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

நத்தக்காடையூர் அருகே மருதுறை பகுதியில் விவசாயிகளை நேரில் சந்தித்து உயிர் உர விதை நேர்த்தி குறித்து விளக்கமளித்தனர். மேலும், 200 கிராம் அசோன்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை 500 மி.லி தண்ணீருடன் கலந்து விதைகளை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் நல்ல பயனை பெறலாம் என்று விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் எடுத்து கூறினர்.

Tags : District Revenue Officer ,Saravanamurthy ,Murali ,Commissioner Murugadoss ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசு...