×

திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா கண்டுகொள்ளாத பறக்கும் படையினர்

திருப்பூர், ஏப்.3: திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக பணம் பட்டுவாடா செய்து வருவதை பறக்கும் படையினர் கண்டும் காணாமல் உள்ளனர்.
தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவை கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு போன்றவை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் விஜயகுமார் போட்டியிடுகிறார். அவர், தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பெரியார்காலனி, அனுப்பர்பாளையம், சாமிநாதபுரம், தண்ணீர்பந்தல், பட்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக கணக்கு எடுத்து ஒரு ஓட்டுக்கு ரூ.500 முதல் பணம் விநியோகம் செய்து வருகின்றனர்.

மேலும், பெரியார் காலனி பகுதியில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் வீடு வீடாக வாக்காளர்கள் சரிபார்ப்பு செய்வது போல வந்து வாக்காளர்களின் கூகுல் பே உள்ள செல்போன் எண்களை வாங்கி சென்றுள்ளனர். இது குறித்து பறக்கும் படை அதிகாரிகளுக்கு தெரிந்து அவர்கள் ஆளும் கட்சி என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

க்யூ ஆர் கோடுடன் டோக்கன் விநியோகம் திருப்பூர் தெற்கு தொகுதிகளுக்குட்பட்ட  பகுதியில் பணம் பட்டுவாடா செய்வதை தவிர்த்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்  வேட்பாளர்கள் க்யூஆர் கோடுடன் டோக்கன் விநியோகம் செய்து அதை ஸ்கேன்  செய்யும் வாக்காளர்களுக்கு கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் பறக்கும் படையினரின் கண்ணில் மண்ணைத்  தூவி நடக்கும் இந்த நவீன தேர்தல் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த தீவிரம்  காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

Tags : Tirupur ,AIADMK ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்