×

காங்கயம் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதயசூரியனை ஆதரியுங்கள்

காங்கயம், ஏப்.3: காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன், குண்டடம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவாய்மேடு, சக்தி வினாயகபுரம், பங்காம்பாளையம் காலனி, செட்டிபாளையம், வஞ்சிபாளையம், இந்திரா காலனி, என்.காஞ்சிபுரம் காலனி, பள்ளிபாளையம், எல்லாபாளையம்புதூர், நிழலி, கவுண்டம்பாளையம், ஆண்டிபுதூர், தட்டார்வலசு, அய்யம்பாளையம், காங்கயம் வடக்கு ஒன்றியம், நல்லிகவுண்டன்வலசு, குரும்பபாளையம், குட்டகாட்டு வலசு, தீர்த்தாம்பாளையம். வாவிபாளையம், வேலாயுதம்பாளையம், பரஞ்சேர்வழி, மாரணம்பாளையம், மாந்தோப்பு, ஆவாரம்பாளையம், நாயக்கன்பாளையம், வடுகபாளையம், நால்ரோடு, பரஞ்சேர்வழி உள்பட 50க்கும் மேற்பட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் ேபசுகையில்,`நெசவாளர்களுக்கு என்று தனியாக கூட்டுறவு வங்கி, அடையாள அட்டை வழங்கப்படும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை, மைதா, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற மகளிர் திருமண நிதி உதவி திட்ட உதவி தொகை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும், அத்துடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரி பள்ளி, மருத்துவனை அமைக்கப்படும். காங்கயம் காளைகள், தமிழர்களுக்கு உரித்தான விலங்கினங்களின் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து கிராமங்களுக்கும் முறையான குடிநீர் வசதி, சாலை வசதி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதி, முதியோர் ஓய்வூதியம், பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ், நெசவாளர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்க திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் தமிழக மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. எனவே அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்’ என்றார். இதில் தி.மு.க ஒன்றிய, நகர நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Udayasuriya ,Kangayam ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்