×

பந்தலூர் பஜாரில் கூடலூர் திமுக., வேட்பாளர் காசிலிங்கம் வாக்கு சேகரிப்பு

பந்தலூர்,ஏப்.3: கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தலூர் பஜார் பகுதியில் திமுக., வேட்பாளர் காசிலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தலுக்கு இன்னும் மூன்று சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தாயகம் திரும்பிய மக்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களிடம் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, திமுக., வேட்பாளர் காசிலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தலூர், பத்தாம் நம்பர் தேயிலை தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்து வந்த இஸ்லாமியர்களிடமும் ஆதரவை கோரினார். தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிைடக்க நடவடிக்கை எடுக்கப்ப்படும். திமுக., ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கல்விக் கடன், வங்கி கடன், நகைக் கடன் உள்ளிட்டவை ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டேன் டீ தொழிலாளர்கள் ஓய்வு பெற்றபின் அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திமுக., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை கூறப்பட்டுள்ள அனைத்து அறிவிப்புக்களும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது நெல்லியாளம் நகராட்சி முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெசீலன், ஞானசேகர், சேகர், அசரப், இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் அனஸ் எடாலத், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்படாளர் ஹாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cuddalore ,DMK ,Pandalur ,Bazaar ,Kasilingam ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...