×

தெற்கு தொகுதியில் மயூரா ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு

கோவை, ஏப்.3: கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். அவர், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், மயூரா ஜெயக்குமார் நெசவாளர் காலனி, என்.டி.சி குவாட்டர்ஸ், ராமர் காலனி, பி.என்.டி காலனி, தடாகம் சாலை, பாரதி பூங்கா, மேட்டுப்பாளையம் ரோடு, கோட்டை மேடு, வெரைட்டி ஹால் ரோடு ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கிறிஸ்தவ மக்களையும், இஸ்லாமியர்களையும் சந்தித்து கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தவிர, வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,`இப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும். திமுக ஆட்சி வந்தவுடன் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுரங்க பாதை வசதி ஏற்படுத்தப்படும்.

 தெரு விளக்குகள் சீரமைக்கப்படும். சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞர்களுக்கான தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். நெசவாளர்களுக்கு என தனி வாரியம் அமைத்து நெசவு தொழில் மற்றும் நெசவாளர்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழில் முனைவோர் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான பணிகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவே, கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்றார்.

Tags : Mayura Jayakumar ,
× RELATED கோவை‌ மாநகர்‌ மாவட்டகாங். வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு