×

ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்ட தொழிற்துறையை மீட்க நடவடிக்கை

கோவை, ஏப்.3: சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மசக்காளிபாளையம், ஹோப் காலேஜ் சாலை, பாலன் நகர்,  ரங்கசாமி லே அவுட், சங்கர் லே அவுட், பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டவர், சிறு குறு தொழிற்கூடங்களுக்குள் சென்று, தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: மழைநீர் வடிகால் அமைக்கவும், பாதாள சாக்கடை அமைக்கவும் திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் அப்பணிகளை ஆமை வேகத்தில் அதிமுகவினர் செய்தனர். இப்போது உள்ள இந்த மழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுநீர் செல்கிறது.

 இதனால், நோய் தொற்று அபாயமும் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முறையான மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளால் நலிவடைந்த சிறு குறு தொழிற்கூட்டங்கள் மீட்கப்பட்டு, வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கி தரப்படும். இவ்வாறு அவர் சினார். இப்பிரசாரத்தின்போது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மா.செல்வராஜ், பகுதி கழக பொறுப்பாளர் சேரலாதன், கொங்கு வடிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சுசி.கலையரசன், வார்டு செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை