×

இது உங்க ஏரியா குளித்தலை அடுத்த நங்கவரத்தில் கரும்பு அறுவடை பரிசோதனை

குளித்தலை, ஏப்.3: குளித்தலை வட்டாரம் குளித்தலை அடுத்த நங்கவரம் (வடக்கு-1) கிராமத்தில் குளித்தலை வட்டார வேளாண்மை துறை சார்பில், கரும்பு அறுவடை பரிசோதனை நடந்தது.திருச்சி மண்டல தேசிய மாதிரி ஆய்வு நிறுவன மூத்த புள்ளியியல் அலுவலர் சிவக்குமார் தலைமையில், துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர் தனபால் மற்றும் விவசாயிகள் சங்கரநாராயணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இப்பரிசோதனை நடைபெற்றது.இதில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தனியார் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் பயிர்அறுவடைபரிசோதனையின் நுணுக்கங்களையும் அதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது தேர்வு செய்யப்பட்ட இந்த கரும்பு பயிரானது 2020 மே மாதம் நடவு செய்யப்பட்டு, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, புள்ளியியல்துறை, மற்றும் பெட்டவாய்த்தலை கரும்பு சர்க்கரை ஆலை நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் பொது பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்டத்தின்கீழ் கரும்பு பயிர் அறுவடை பரிசோதனை செய்ய 2020 ஆகஸ்ட் மாதம் இந்த வயல் பரிசோதனைக்காக தேர்வு செய்யப்பட்டது. மேலும், நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி கணக்கிடுவது இம்மாதிரி பயிர் அறுவடை பரிசோதனை மூலமாகவே என்பதை கல்லூரி மாணவர்களுக்கு விளக்கி, பயிற்சி அளித்தார். இதில் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் மற்றும் கிராம விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nangavaram ,Area Bath ,
× RELATED குளித்தலை அருகே சாலை, பாலம் அமைக்கும்...