கரூர் காந்தி கிராமம் அருகே பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் மறியல்

கரூர், ஏப். 3: கரூர் காந்திகிராமம் அருகே மகள் சாவில் மர்மம் உள்ளது என கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. வேன் டிரைவர். இவரின் மனைவி கவுரி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் கவுரி மின்சாரம் தாக்கி காயமடைந்ததாக கரூர் தனியார் மருத்துவமனையில் பாலசுப்ரமணியன் மற்றும் உறவினர்கள் சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இறந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் , மகள் சாவில் மர்மம் உள்ளது, இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று மதியம் கரூர் திருச்சி சாலை காந்திகிராமம் அருகே சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பசுபதிபாளையம் போலீசார், உறவினர்களிடம் பேசி இது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், இந்த பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>