×

நாகையில் 56 பேருக்கு கொரோனா தொற்று

நாகை, ஏப். 3: நாகை மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி வரை 9,126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று (2 ம் தேதி) 56 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதேபோல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நாகை மாவட்டத்துக்கு வந்தவர்கள் 1ம் தேதி வரை 89 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று (2ம் தேதி) புதிதாக யாருக்கும் நோய் தொற்று கண்டறியப்படவில்லை. எனவே நாகை மாவ ட்டத்தில் இதுவரை 9,271 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி வரை 349 பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் நோய் தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 பேர் இறந்துள்ளனர்.

Tags : Nagaland ,
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...