×

பூம்புகார் கலைக்கூடம் புனரமைக்கப்படும் திமுக வேட்பாளர் நிவேதா முருகன் வாக்குறுதி

மயிலாடுதுறை, ஏப். 3: பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன் நேற்று பூம்புகார் தர்மகுளத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். வேட்பாளர் நிவேதா முருகன் பேசும்போது,சோழமன்னரின் தலைநகராக விளங்கிய இந்த இடத்தில் நின்று வாக்கு சேகரிக்கிறேன். பூம்புகார் கலைக்கூடம் இன்றைக்கு சிதிலமடைந்து சீரழிந்து கிடக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாகரீகத்தை உலகுக்கு பறைசாற்றிய இந்த ஊர் இன்றைக்கு கேட்பாரற்று கிடக்கிறது.

திமுக அரசு பதவியேற்றதும் பூம்புகார் கலைக்கூடம் மீண்டும் புதுப்பொலிவு பெறும். கடலில் மூழ்கி கிடக்கும் தமிழரின் நாகரீக சின்னங்களை ஆய்வு செய்து எடுத்து வந்து தமிழர் நாகரீகத்தின் தொன்மையை ஆவணப்படுத்துவேன். தமிழ், நீதிமன்ற வழக்காடு மொழியானால் வழக்கறிஞர் முதல் பொதுமக்கள் அனைவரும் மிகவும் எளிதாக நீதிமன்ற தீர்ப்புகளை புரிந்து கொள்ளவும், வாதாடவும் உறுதுணையாக இருக்கும். இதற்கு திமுக நடவடிக்கை எடுக்கும் என்றார்.வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர் சசிக்குமார், கட்சி பொறுப்பாளர்கள் முத்து ராஜேந்திரன், முத்து தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,Niveda Murugan ,Poompuhar Art Gallery ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி