குன்னம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் அலுவலர் ஆய்வு

பெரம்பலூர்,ஏப்.3: குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 133,134,135, 135ஏ ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குன்னம் சட்டமன்ற தொகுதியில் 38 இடங்களில் உள்ள 96 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி, சுதந்திரமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட அனைத்துவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா மூலமாகவும் மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நுண்பார் வையாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்களது முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்படும் என வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>