3 போலீசார் உள்பட 69 பேருக்கு கொரோனா

திருவாரூர், ஏப்.3திருவாரூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து வரும் 30 முதல் 35 வயது உடைய 3 போலீசார் உட்பட திருவாரூர் நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மட்டும் 24 பேர், மன்னார்குடியில் 9 பேர், நன்னிலம் மற்றும் நீடாமங்கலத்தில் தலா 4 பேர் வலங்கைமான் மற்றும் குடவாசலில் தலா 3 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,136ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவாரூர் நகரில் இது போன்ற தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு நகரில் காரைக்காட்டு தெரு, ஐ.பி கோயில் தெரு, பெரிய மில் தெரு உட்பட பல்வேறு இடங்களில் நகராட்சி மூலம் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடைக்கப்பட்ட பகுதிக்குள் இருப்பவர்கள் வெளியில் செல்ல முடியாமலும் வெளியில் இருந்து உள்ளே செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 80 பேர், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 36 பேர், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 38 பேர், மத்திய பல்கலைக்கழக கட்டிடத்தில் 29 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் மற்றும் வீட்டு சிகிச்சையில் 180 பேர், வெளி மாவட்டங்களில் 43 பேர் என மொத்தம் 424 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>