4 எம்எல்ஏ தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

திருவாரூர், ஏப்.3: திருவாரூர் மாவட்டம், 4 சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் ராம்லஹான் பிரஷாத் குப்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழகத்தில் வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்களுக்கான வாக்கு எண்ணும் மையமானது திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் ராம் லஹான் பிரஷாத் குப்தா, தேர்தல் போலீஸ் பார்வையாளர் அமித்சந்த்ரா ஆகியோர் நேற்று ஆய்வு செய்து கணகாணிப்பு கேமிரா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு அறை போன்றவற்றினை ஆய்வு செய்தனர்.இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா, எஸ்.பி கயல்விழி, தேர்தல் நடத்தும் அலுவலர்களான திருவாரூர் பாலசந்திரன், மன்னார்குடி அழகர்சாமி, திருத்துறைப்பூண்டி கீதா, நன்னிலம் பானுகோபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>