திமுக வேட்பாளர் வீடு அலுவலகத்தில் ரெய்டு

சென்னை, ஏப்.3: சென்னை அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன் அவரது  மகன் கார்த்திக் இருவரும் அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் காலை 8.30 மணி அளவில் திடீரென அவரது வீட்டிற்கு புகுந்து சோதனையை தொடங்கினர். அதனை தொடர்ந்து, அமைந்தகரை மற்றும் சேட்டுபட்டில் உள்ள அலுவலகத்தி–்லும் சோதனை மேற்கொண்டனர்.

தகவலறிந்த  வந்த அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் ராமலிங்கம், அவரது தலைமையில் கொண்ட  திரளான திமுக தொண்டர்கள் வேட்பாளர் மோகன் வீட்டில் சோதனை நடந்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் முன் ஒன்று கூடினர். இதனை தொடர்ந்து,  அவர்கள் வருமானவரிதுறை ரெய்டை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர்,  சாலை மறியலில் ஈடுப்பட்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த அண்ணா நகர் உதவி ஆணையர் ராஜன் மற்றும் திருமங்கலம் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் கொண்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுக தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சாலை மறியலை கைவிட்டு கலைந்து  சென்றனர்.

Related Stories:

>