மாதவரத்தில் உள்ள தேவாலயத்தில் மாதவரம் வி.மூர்த்தி பிரசாரம்

திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி புனித வெள்ளியான நேற்று மாதவரம் தபால் பெட்டி பகுதியில் உள்ள செபாஸ்டின் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விளக்கியும், மீண்டும் அமைய உள்ள அதிமுக ஆட்சியில் கிறிஸ்தவ மக்களுக்காக தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வேன் என்றும்,  அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுப்பேன், அதிமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள அத்தனை சலுகைகளையும் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்  வகையில் நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும், எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அப்போது கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஆதரவு இரட்டை இலைக்கு என்று உறுதி அளித்தனர். தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், சமூக நல அமைப்புகள், மகளிர் குழுவினர் ஆகியோரை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதேபோல், மாதவரம் மூர்த்திக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள், மகளிர் அணியினர், பாஜக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Related Stories:

More
>