×

கார் பேன்ஸி நம்பருக்கு 17 லட்சம் செலவழித்த ஜூனியர் என்டிஆர்

சென்னை: காருக்கான பேன்ஸி நம்பருக்கு ரூ.17 லட்சம் செலவழித்துள்ளார் தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர்.ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். சமீபத்தில் விலை உயர்ந்த லம்போர்கினி கார் ஒன்றை வாங்கினார் ஜூனியர் என்டிஆர். இந்த காரின் விலை ரூ.3.50 கோடி. இந்தியாவில் முதன்முதலில் இந்த வகை காரை வாங்கியவர் இவர்தான்.புது காருக்கு பேன்ஸி நம்பரை வாங்க விரும்பினார் ஜூனியர் என்டிஆர். அவரது வீட்டில் ஏற்கனவே உள்ள கார்களின் எண், 9999 என வருவதுபோல் வாங்கி வைத்துள்ளார். அதேபோல் லம்போர்கினி காருக்கும் பேன்ஸி எண் வாங்குவதற்காக மட்டும் 17 லட்சம் ரூபாயை அவர் செலவழித்துள்ளார். அதற்காக நடந்த ஏலத்தில் TS 09 FS 9999 என்ற எண்ணை ரூ.17 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். எண் கணிதத்தின் மீது ஜூனியர் என்டிஆருக்கு அதிக நம்பிக்கை என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்….

The post கார் பேன்ஸி நம்பருக்கு 17 லட்சம் செலவழித்த ஜூனியர் என்டிஆர் appeared first on Dinakaran.

Tags : Jr. NTR ,Chennai ,Junior NTR ,RRR ,Rajamouli ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...