×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 245 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை

காஞ்சிபுரம், ஏப்.2: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 245 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், பெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் ஆலந்தூர் தொகுதியில் 3,89,857 வாக்காளர்கள், பெரும்புதூரி 3,57,433, உத்திரமேரூரில் 2,59,633, காஞ்சிபுரத்தில் 3,08, 406 பேர் என மொத்தம் 13,15, 329 வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் 493 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆலந்தூர் தொகுதியில் ஏற்கனவே உள்ள 391 வாக்குச்சாவடி மையங்களுடன் 174 மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்புதூரில் 358 மையங்களுடன், 154 மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. உத்திரமேரூரில் 301 மையங்களுடன் 58 மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் 329 மையங்களுடன் 107 மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 493 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு 1872 வாக்குச்சாவடிகள் செயல்பட உள்ளன. இதில் ஆலந்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் 48 மையங்கள், பெரும்புதூரில் 18 வாக்குச்சாவடிகளில் 53 மையங்கள். உத்திரமேரூரில் 28 வாக்குச்சாவடிகளில் 67, காஞ்சிபுரத்தில் 19 வாக்குச்சாவடிகளில் 77 மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் 79 வாக்குச்சாவடிகளில் 245 மையங்கள் பதற்றமானவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram district ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன்...