×

திருப்போரூர் தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு

திருப்போரூர். ஏப்.2. திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்று பரிசோதிக்கும் வகையில், திருப்போரூர் தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்காக, பல்வேறு கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த சீல் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு 21 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன. பின்னர் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து சோதனை செய்தனர்.

Tags : Thiruporur constituency ,
× RELATED திருப்போரூர் தொகுதியில் 12 பேர் மனுக்கள் ஏற்பு: 7 மனுக்கள் தள்ளுபடி