×

திருச்செந்தூர் தொகுதி ஆத்தூரில் வெற்றிலை ஏற்றுமதி மையம் பிரசாரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி

ஆறுமுகநேரி, ஏப். 2:  திருச்செந்தூர்  தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஆத்தூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். சேர்ந்தபூமங்கலம் டிசிடபிள்யூ காலனி, சேர்ந்தபூமங்கலம், கைலாசபுரம், குமாரப்பண்ணையூர், செல்வன்புதியனூர், புதுநகர், தலைப்பண்ணையூர், ஆவரையூர், தலைவன்வடலி, கீரனூர், ஆத்தூர் பகுதிகளில் வாக்குசேகரித்த அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் ‘‘திருச்செந்தூர் தொகுதியில் தடைகளை மீறி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்குத் தேவையான பணிகள் தொடரும். பெண்கள், முதியோர் மற்றும் அனைத்துத்தரப்பினருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும். ஆத்தூரில் வெற்றிலை ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்’’ என்றார்.

 இதில் திமுக மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஆழ்வை ஒன்றியச் செயலாளர் நவீன்குமார், மேல ஆத்தூர் பஞ். தலைவர் சதீஷ்குமார், துணைத்தலைவர் பக்கீர் முகைதீன், சேர்ந்தபூமங்கலம் பஞ். தலைவர் சந்திரா மாணிக்கவாசகம், ஆத்தூர் நகர பொறுப்பாளர் முருகப்பெருமாள், மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மாணிக்கவாசகம், கோபி, வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் மனோஜ், ஸ்டீபன்தாஸ், சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் கமாலுதீன், ஊர்த்தலைவர் கண்ணன், நிர்வாகிகள் அரிச்சந்திரன், சந்தனகுமார், கணேசன், பூலார், பிரபு, ராஜேந்திரன், குமார், தங்கமுத்து, சின்னத்துரை, சின்னத்தம்பி, ராமச்சந்திரன், ரமேஷ், கார்த்திகேயன், காங். வட்டாரத்தலைவர் பாலசிங், ஆத்தூர் நகரத்தலைவர் சின்னத்துரை, இளைஞர் காங். தலைவர் ராம்குமார், ஏசுதாஸ், லிங்கராஜ் பங்கேற்றனர்.

உடன்குடி:இதை தொடர்ந்து, உடன்குடி பகுதிக்கு உட்பட்ட  சோலைகுடியிருப்பில் பிரசாரத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, துவக்கினார். தொடர்ந்து எள்ளுவிளை, கரிசன்விளை,  வீரப்பநாடார்குடியிருப்பு, சீருடையார்புரம், சமத்துவபுரம்,  புங்கம்மாள்புரம், குருநாதபுரம், சுதந்திரபுரம், மாநாடு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தனது சொந்த ஊரான தண்டுபத்திற்கு வருகைதந்தார். அவருக்கு பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஊரில் உள்ள செல்வவிநாயகர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனிதா ராதா கிருஷ்ணனுக்கு திமுக கிளை பொறுப்பாளர்  திலகன், பஞ்சாயத்து செயலாளர் பாலகணேசன் தலைமையில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  பின்னர் அத்தியடிதட்டு, உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம்,  மரியம்மாள்புரம், வைத்தியலிங்கபுரம், கிறிஸ்தியாநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரித்து பேசினார்.

தண்டுபத்தில் அவர் பேசுகையில் ‘‘தமிழகம் முழுவதும் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவான  அலை வீசி வருகிறது. தலைவர் ஸ்டாலின் முதல்வரானவுடன் திருச்செந்தூர்  தொகுதியில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்கள் கொண்டு வரப்படும். குறிப்பாக  மகளிர், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற திட்டங்களுக்கு ஏற்பாடு செய்வேன். புதிய நீர்ப்பிடிப்பு குளங்கள் உருவாக்கப்படும். எனவே, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார். பிரசாரத்தில் திமுக மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமைச்  செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன்,  சுற்றுச்சூழல் அணி ரவி பொன்பாண்டி,  மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞர் அணி ராமஜெயம், சிறுபான்மைநல உரிமைப்பிரிவு ராஜேஷ்,  ஒன்றியச் செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங், நகரச் செயலாளர்  ஜாண்பாஸ்கர், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், மாவட்ட  துணைஅமைப்பாளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, இளங்கோ, இளைஞரணி அஸ்ஸாப், மாணவர் அணி  முகைதீன், அமிர்தாமகேந்திரன், சிறுபான்மை நலஉரிமைப்பிரிவு சிராசூதீன்,  மீனவர் அணி மெராஜ், முன்னாள் கவுன்சிலர் பிரபாகர் முருகராஜ், மாநில காங்கிரஸ்  பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், நகரத் தலைவர் முத்து,  திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  முத்துகுமார், விசிக ஒன்றியச் செயலாளர் சங்கர், மதிமுக ஒன்றியச் செயலாளர்  இம்மானுவேல், மாநாடு திமுக கிளைச்செயலாளர் சுடலைக்கண், அவைத்தலைவர்  இசக்கிமுத்து, பம்பாய் பழனி, இளைஞர் அணி முத்துகுமார், ஐயப்பன், பாலகிருஷ்ணன்,  செல்லத்துரை, முத்துபாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய  ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Anita Radhakrishnan ,Attur, Thiruchendur constituency ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...