தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் படைவீரர்கள் ஏப். 4ல் எஸ்பி ஆபீசில் ஆஜராக வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

தூத்துக்குடி, ஏப். 2: தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏதுவாக அடையாள அட்டையுடன் நாளை மறுதினம் (4ம்தேதி) காலை 9 மணிக்கு எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு வரவேண்டும். மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் முன்னாள் படை வீரர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும், பல்வேறு தொழில் மையங்களில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களை தேர்தல் பணிக்காக அப்பணியில் இருந்து தற்காலிகமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நாளை மறுதினம் (4ம்தேதி முதல்) 7ம்தேதி  வரையில் முன்னாள் படைவீரர்களை அப்பணிகளில் இருந்து விடுவித்து எஸ்பி தலைமையில் தேர்தல் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்திட ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>