இன்ஸ்பெக்டரை கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியல்

திருச்செந்தூர், ஏப். 2: திருச்செந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குளோரியானை பிரசாரத்தின்போது  குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர்  தரக்குறைவாக பேசியதை கண்டித்து  திருச்செந்தூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருச்செந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குளோரியான் நேற்று முன்தினம் உடன்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போத அவரை குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தரக்குறைவாகப் பேசினாராம். இதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே இருந்து பகத்சிங் பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்த சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசப்படுத்திய திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், புகார் கொடுத்தால் துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ தனப்பிரியாவிடம் மனு கொடுத்து சென்றனர். போராட்டத்தில் வேட்பாளர் குளோரியான், தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன், மகளிர் பாசறை தெற்கு மாவட்டச்செயலாளர் அன்னலட்சுமி, தொகுதி செயலாளர் பிரபு, தொகுதி தலைவர் ஸ்டீபன் லோபோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>