மணப்பாறை தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன் திமுக வேட்பாளர் அப்துல்சமது வாக்குசேகரிப்பு

மணப்பாறை, ஏப்.2: மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அப்துல்சமது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பொதுமக்கள் வரவேற்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். வையம்பட்டி ஒன்றிய பகுதிகளான அமயபுரம், வள்ளுவபட்டி, மலையாண்டிபட்டி, குளத்தூராம்பட்டி, வீரப்பூர், நவகிணத்துப் பட்டி உள்பட 80க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார். வீரப்பூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் அப்துல் சமது பேசும்போது, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் இடம் பெற்றுள்ளன. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நான் வெற்றிப் பெற்றால், தினசரி பொதுமக்களின் குறைகளை கேட்டறிவேன். மணப்பாறை தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற எனக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். இரு சக்கர வாகனத்தில் வந்து கிராமங்களில் உள்ள பொதுமக்களிடத்திலும், வயல்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டினார். தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: