அதிமுக வேட்பாளர்குபகிருஷ்ணன்வாக்குகளைசேகரித்தார். உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன் தேமுதிக வேட்பாளர் வக்கீல்கிருஷ்ணகோபால் பிரசாரம்

மணப்பாறை, ஏப்.2: மக்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன் உங்களுக்காக உழைக்க முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று மணப்பாறை தொகுதி தேமுதிக வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் பேசினார்.

மணப்பாறை சட்டமன்ற தொகுதி அமமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் வக்கீல் கிருஷ்ண கோபால் நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று மேட்டுக் கடை, சின்னமணப் பட்டி -அனந்தா னூர் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் முரசு சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். வேட்பாளர் பேசும்போது, நான் வெற்றிபெற்றால் கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன். நான் பதவியில் இல்லாவிட்டாலும் தனியார் பனியன் தொழிற்சாலை கொண்டு வந்தேன். அதில் இப்பகுதியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். மக்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன்.  மணப்பாறை தொகுதியை வளமிக்க பகுதியாக மாற்றுவேன். உங்களுக்காக உழைக்க முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என பேசினார். கிருஷ்ணகோபாலை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அமமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>