×

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா ₹500 விநியோகம்


 தடுத்த திமுகவினரை தாக்க முயன்றதால் பரபரப்பு
 தேர்தல் பறக்கும் படையிடம் வீடியோவுடன் புகார்

சென்னை, ஏப்.2: தமிழக சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகிறது. தொகுதி முழுவதும் திமுகவுக்கு ஆதரவான அலை வீசுவதால் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன் சார்பில் தொகுதி முழுவதும் வீடு வீடாக இரட்டை இலை படம் போட்ட துண்டு சீட்டுகளுடன் ₹2 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர் பகுதியில் வீடுகள் தோறும் நேற்று காலை அதிமுக சார்பில் வாக்காளர் அடையாள அடை நகலுடன் ஒரு ஓட்டுக்கு ₹500 வீதம் பணப்பட்டுவதாக செய்யப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த திமுகவினர் அந்த பகுதிக்கு சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த 2 அதிமுகவினரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டையின் நகல்கள் மற்றும் ₹8 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் பணப்பட்டுவாடாவை தடுக்க முயன்ற திமுகவினரை தாக்க முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் பணத்துடன் பிடிப்பட்ட அதிமுகவினரை திமுகவினர் பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் பணம் கொடுத்ததற்கு உரிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். பிறகு அதிமுகவினர் பணம் கொடுத்த வீடியோ ஆதாரத்துடன் திமுகவினர் சோழிங்கநல்லூர் தொகுதி தேர்தல் பறக்கும் படையினரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cholinganallur ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...