×

பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தித் தருவேன்: அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா வாக்குறுதி

திருவள்ளூர், ஏப். 2: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அதிமுக ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர் தலைமையில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். வெண்மனம்புதூரில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் பிரசாரத்தை தொடங்கினார்.  வேட்பாளர் பி.வி.ரமணாவுக்கு கிராமங்களில் பொது மக்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக வரவேற்றனர். 2021 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக அறிவித்துள்ள குடும்பத் தலைவிக்கு ரூ. 1500 உதவித்தொகை, வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசம்,  விலையில்லா வாஷிங் மெஷின் போன்ற அனைத்தையும் வழங்குவோம் என பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்பொழுது சிற்றம்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகி சிற்றம் ஜெ.சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன் ஆகியோர் மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க பட்டாசுகள் வெடித்தும், ஆளுயர ரோஜா மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது அவர் பேசும் போது,  நான் கடந்த 2011 முதல் 16 வரை அமைச்சராக இருந்தபோது திருவள்ளூர் தொகுதிக்கு எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி சாதனை படைத்துள்ளேன். மீண்டும் நான் வெற்றிபெற்றால் பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தித் தருவேன் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் அமைத்து வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவேன். நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்களை கட்டி தரவும் நடவடிக்கை எடுப்பேன். அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது  பாமக மாநில நிர்வாகிகள்  வ.பாலயோகி, நா.வெங்கடேசன்,     இ.தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் மணவூர் சே.பூபதி ரோஸ் ரெட்டியார், நிர்வாகிகள்  சி.கேசவன், ந.வாசுதேவன், கே.என்.தாஸ், செஞ்சிகுமார், வக்கீல் கேசவன், ஊராட்சித் தலைவர் ஏழுமலை, பா.சஞ்சய் பாலயோகி, பாஜக மாவட்ட தலைவர் ஏ.ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் இரா.கருணாகரன் மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ், மண்டல் தலைவர் சிவகுமார், கோபால், புரட்சி பாரதம் மாவட்ட இளைஞரணி தலைவர் செஞ்சி ஜெ.ஜவகர், துணைத் தலைவர் ஜான்சிராணி ஜவகர், ஒன்றிய நிர்வாகிகள் பொன்னுதுரை, வக்கீல் சி.சரவணன், பொன்னன், மோகன்ராஜ், செல்வம் பாண்டியன் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், அதிமுக நிர்வாகிகள் காசி, இ.இன்பநாதன், பி.பாசூரன், பொ.பூபாலன், செஞ்சி பாலு, கே.என்.முரளி, என்.சீனிவாசன், இரு.வே.தட்சிணாமூர்த்தி, எஸ்.ஞானகுமார், கா.ரஜினி ஆதிபாஸ்கர், மேலாசுதாகர், பெருமாள்பட்டு எம்.வெங்கடேசன், கொட்டாமேடு சதீஷ், முனிபாபு, ஒன்றிய கவுன்சிலர்கள்  மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags : AIADMK ,PV Ramana ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...