×

திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு ேசகரிப்பு

திருத்தணி, ஏப்.2:  திருத்தணி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக  திருத்தணி கோ.அரி நேற்று திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட இ.என்.கண்டிகை,,  மாம்பாக்கம் சத்திரம்,, மாம்பாக்கம் எஸ் அக்ரஹாரம், பெரிய கடம்பூர், சின்ன  கடம்பூர், கார்த்திகேயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும்  வெயிலில் தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.   அப்போது அவர் பேசுகையில் வாக்காளர்களாகிய தாங்கள் இரட்டை இலைச்  சின்னத்தில் எனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய தங்களை மிகவும்  வணங்கிப் கேட்டுக்கொள்கிறேன். அதிமுக அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றால்  குடும்பப் பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.  வருடத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும்.. முதியோர்களுக்கு ஆயிரம்  ரூபாய்க்கு பதில் 2000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் வாஷிங்மெஷின்  வழங்கப்படும் வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு அரசே வீட்டுமனை வாங்கி  அவர்களுக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளும் . அதிமுகவின் முதல்வர்  வேட்பாளர் எடப்பாடி மீண்டும் பொறுப்பேற்றால தங்களுக்கு கேபிள் இணைப்பு   இலவசமாக வழங்கப்படும். இதுவரை எந்த அரசும் பொங்கல் பரிசு ரூபாய் 2500  வழங்கவில்லை. எனவே மீண்டும் எடப்பாடி அரசு தொடர்ந்திட தங்கள் இரட்டை இலை  சின்னத்திற்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்  வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.  

  அப்போது அவருடன்  திருவள்ளூர் மாவட்ட ஆவின் பால்வளத் தலைவர் வேலஞ்சேரி த. கவி சந்திரன் ,திருத்தணி  ஒன்றிய செயலாளர் இ. என். கண்டிகை ரவி. ஒன்றிய கவுன்சிலர் பாலாஜி, முன்னாள்  கவுன்சிலர் கேபிள், சுரேஷ் கூட்டுறவு சங்கத் தலைவர் சுரேஷ், ரயில் குமார்,  வழக்கறிஞர் தியாகராஜன், டாஸ்மாக் பழனி ,பாமக மாவட்ட செயலாளர் மணி, பாமக  ஒன்றிய செயலாளர் பூபாலன், தொகுதி செயலாளர்  எம் விநாயகம், பாஜக கட்சி  சார்பில் சங்கர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், வழக்கறிஞர் பாலாஜி சுனில்,  புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆறுமுகம், முனுசாமி, தேசிய நீதி கட்சி  தலைவர் கமலநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னதாக அம்மா மக்கள்  முன்னேற்ற கழகத்திலிருந்து நெசவாளர் அணி அம்மா பேரவை இணைச் செயலாளர்  புஷ்பராஜ் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Tags : Trivandrum ,AIADMK ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி