போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த நபருக்கு குண்டாஸ்

சென்னை: குன்றத்தூரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.1.5 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ) கார்த்திகேயன் (47) என்பவரை கைது செய்தனர். அவர் மீது தொடர் நில அபகரிப்பு வழக்குகள் உள்ளதால் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்டு வந்த கார்த்திக் (எ) காத்திக்கேயனை குண்டர் சட்டத்தில் நேற்று சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More