கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் என்.ஆர்.தனபாலன் வாக்கு சேகரிப்பு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேற்று பழனி ஆண்டவர் கோயில் தெரு, மெல்பட்டி பொண்ணப்பன் தெரு, பாரதி சாலை,  வியாசர்பாடி, கொடுங்கையூர்  உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது: அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும் பெரம்பூர் தொகுதியில் மக்கள் என்னிடம் கொடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மக்கள் குறைகள் விரைவில் தீர்க்கப்படும். குறிப்பாக, பெரம்பூர் பாரதி சாலை, மேல்பட்டி பொண்ணப்பன் தெரு ஆகிய பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். தற்போது ஒரு குடம் குடிநீர் 8 ரூபாய் கொடுத்து இப்பகுதி மக்கள் வாங்குகின்றனர். நான் சட்டமன்ற உறுப்பினரானதும்  பெரம்பூர் தொகுதியில் பொதுமக்களுக்கு தரமான குடிநீரை இலவசமாக வழங்குவேன். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவேன். கணினி பயிற்சி மையம் ஏற்படுத்தி பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலை வாய்ப்பை பெற்றுத் தருவேன். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>