×

அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு

அருப்புக்கோட்டை, ஏப் .2:   அருப்புக்கோட்டை நகரில் மதுரை ரோடு வீரலட்சுமிநகர், நெசவாளர் காலனி, அன்புநகர், சத்திய வாணிமுத்து நகர், பெரியார் நகர்,கலைஞர் நகர், அஜிஸ்நகர், பெர்க்கின்ஸ்புரம், மணிநகரம்,பெரிய பள்ளிவாசல், காயிதே மில்லத்தெரு, வி.வி.ஆர் காலனி உட்பட பல்வேறு தெருக்களில் திமுக வேட்பாளர் சாத்தூர்ராமச்சந்தின் எம்எல்ஏ தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:  அருப்புக்கோட்டை நகரில் உள்ள தெருக்களில் 75 சதவீத சாலை அமைக்கும்பணி நடைபெற்றுள்ளது, மீதமுள்ள தெருக்களில் விரைவில் பேவர்பிளாக்கற்கள் பதிக்கப்படும். புதிய தாமிரபரணி குடிநீர்திட்டம் மூலம் தினசரி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அன்புநகரில் சமுதாயக்கூடம், பெண்கள் சுகாதார வளாகம், கட்டித்தரப்படும். எனவே, எனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். சென்ற இடங்களில் எல்லாம், பெண்கள் ஆராத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், நகர திமுக செயலாளர் மணி, துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டசெயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, நகர அவைத்தலைவர் கணேசன், இளைஞரணி இளங்கோ, திமுக பிரமுகர் சிவசங்கரன், வார்டு செயலாளர் டேனியல் பிரபாகரன், சிபிஎம் காத்தமுத்து மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.



Tags : Aruppukottai ,DMK ,Sathur Ramachandran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...