திருச்சுழி அருகே அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

திருச்சுழி, ஏப். 2:  திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியிலுள்ள தனியார் மகாலில் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் திருச்சுழி ஒன்றிய செயலாளர் போத்திராஜ் திமுகவில் இணைந்தார். திருச்சுழி மகளிர் ஒன்றிய செயலாளர் ராமதிலகம், கணக்கியைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் பாலகிருஷ்ணன், கீழ பாறைக்குளத்தை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் மாரிமுத்து, தேமுதிகவை சேர்ந்த தேர்தல்ராஜ் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில்  திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுதம்பி, திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி, ஒன்றிய துணை சேர்மன் மூக்கையா, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஆலடிபட்டி செல்லத்துரை, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தொல்காப்பியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>