கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

பெரியகுளம், ஏப். 2: பெரியகுளம் அருகே உள்ள வேளாண் தொழில்நுட்பக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் தர்ஷினி, ஜெயஸ்ரீ, சிவசங்கரி, ரெஜினா, தேவி, இசக்கியம்மாள் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், சருதிபட்டி கிராம விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இவர்கள், அப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தென்னை ஊக்கி திரவத்தை பயன்படுத்தும் முறை குறித்தும், அதனை பயன்படுத்துவதால் அதிக எண்ணிக்கையில் காய்கள் பெறுவது உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். மேலும், காய்கள் பெரிதாவதற்கும் மற்றும் பருப்பு எடை கூடுவதற்கும் இந்த வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்தும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related Stories:

>