மக்களிடம் நேரடியாக குறை கேட்க வசதியாக பொதுமக்கள் குறைதீர் மையங்கள் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி உறுதி

தேவகோட்டை, ஏப்.2: காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, தேவகோட்டை கண்ணங்குடி வட்டார பகுதிகளான சின்ன, பெரிய உஞ்சனை, மொட்டையன்வயல், மங்களம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். மக்களுக்கு என்னுடைய பணி மீது நம்பிக்கை இருந்ததாலேயே 2 முறை தலைவராக்கினார்கள்.

உங்களில் ஒருவனாக, உங்களுக்கு ெதாடர்ந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன். உங்களின் கோரிக்கைகளை தெரிவிக்க வசதியாக தேவகோட்டையில் பகுதி நேர எம்எல்ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும். தொகுதி மக்களின் குறைகளை தெரிவிக்க என தனியாக செல்போன் ஆப் செயல்படுத்தப்பட உள்ளது. தவிர பொதுமக்கள் குறைதீர் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு மக்களின் குறைகள் நேரடியாக பெறப்படும்’’ என்றார்.

பிரசாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜ்மோகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாணாவயல் முத்துராமன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஜோதிநாதன், திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் நல்லிவயல் அழகேசன், சட்ட பாதுகாப்பு குழு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைசெயலாளர் சொக்கலிங்கம், வி.சி.க ஒன்றிய செயலாளர் தங்கமணி, மாவட்ட அமைப்பாளர் பழனியப்பன், மதிமுக மாநில நிர்வாகி பசும்பொன் மனோகரன், வழக்கறிஞர் முருகானந்தம், திமுக ஒன்றிய பிரதிநிதி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>