கொட்டும் மழையிலும் பாஜ வேட்பாளர் பிரசாரம்

மதுரை, ஏப்.2: மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் டாக்டர் சரவணன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். மதுரை வடக்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜ சார்பில் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் சரவணன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை ஆதரித்து முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, நடிகர் செந்தில், நடிகை நமீதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பிரசாரம் செய்தனர். அவர் பல்வேறு வார்டுகளில் பிரசாரம் செய்தார். நேற்று தொகுதியின் பல்வேறு இடங்களில் திறந்த வெளி காரில் நின்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10ஆயிரம் வழங்கப்படும். சாலை, குடிநீர், சாக்கடை,  உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச வீடுகள் கட்டித்தருப்படும். அரசு வேலைக்காக இலவச பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படும். சட்டப்போராட்டம் நடத்தி பட்டா பெற்றுத்தருவேன். ரோடு வசதியில்லாத தெருக்களில் தார்ரோடு, பேவர்பிளாக் சாலை அமைத்துத்தருவேன் என பிரசாரம் செய்தார். வேட்பாளர் சரவணன் ரிசர்வ் லைன், விசாலாட்சிபுரம், விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்த போது, மழை பெய்தது. ஆனாலும் கொட்டும் மழையிலும் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது பாஜ மாவட்ட தலைவர் சீனிவாசன், அதிமுக மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் ஜெயவேல், பகுதி செயலாளர்கள் கண்ணன், முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>