காமராஜர் பல்கலையில் இரண்டு பேருக்கு கொரோனா

திருப்பரங்குன்றம், ஏப்.2:  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள சான்றிதழ் பிரிவில் உள்ள அலுவலர் ஒருவருக்கும், இளைஞர் நலன் துறையை சேர்ந்த விரிவுரையாளருக்கும் சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த அலுவலகத்தில கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவுவதை தொடர்ந்து பல்கலைக்கழக அலுவலர்களுக்கு மீண்டும் கொரோனா பரவியதால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

Related Stories:

>