ஆயக்குடி, தாழையூத்து, சத்திரப்பட்டியில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டி தரப்படும் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ உறுதி

ஒட்டன்சத்திரம், ஏப். 2: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி நேற்று சாலைப்புதூர், கணக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அர.சக்கரபாணி பேசுகையில், ‘கடந்த திமுக ஆட்சியில் சாலைப்புதூரில் ரயில்வே மேம்பாலம் கட்டி கொடுக்கப்பட்டது. மேலும் இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு, முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலை, 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞரின் விரிவான காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும், ரேஷன் கார்டுக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.24 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மஞ்சநாயக்கன்பட்டி, காளிபட்டி குளத்திற்கு புதிய வாய்க்கால் அமைத்து தரப்படும். ராமபட்டிணம்புதூர் பெரியதுரையில் தடுப்பணைகள் கட்டப்படும். ஒட்டன்சத்திரம்- பழநி இடையே ஆயக்குடி, தாழையூத்து, சத்திரப்பட்டி பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் வசதிக்காக நெடுஞ்சாலையில் சமுதாய கூடங்கள் கட்டி தரப்படும். இதுபோல் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: