×

கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்கப்படும் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ உறுதி

கொடைக்கானல், ஏப். 2: பழநி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ கடந்த 3 நாட்களாக கொடைக்கானல் நகர், கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் தீ விர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இவர் நேற்று கீழ்மலை பகுதிகளான பாச்சலூர், கடைசிகாடு, நல்லூர் காடு, கேசி பட்டி, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்கப்படும். சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை அமைத்து தரப்படும். மேலும்இப்பகுதியில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இதற்காக மலைவாழ் மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம். எனவே வரும் 6ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். பிரசாரத்தில் கீழ்மலை ஒன்றிய செயலாளர் கருமலைபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், ஒன்றிய தலைவர் ஸ்வேதா ராணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஐயப்பன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,IP ,Senthilkumar ,MLA ,Kodaikanal hill ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்