×

திமுக வேட்பாளர் செல்வராஜிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு

திருப்பூர், ஏப். 2: திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளார் செல்வராஜிற்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திருப்பூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று திருப்பூர் டிஇஎல்சி அமைப்பின் ரெவரண்ட் அசோக்குமார், திருப்பூர் சிஎஸ்ஐ அமைப்பின் ரெவரண்ட் லூர்துமேரி, திருப்பூர் மாவட்ட பேராயம் ராஜன், திருப்பூர் மாவட்ட போதக ஐக்கியம் தலைவர் ஏனோக், பொதுச் செயலாளர் லாசர் உள்ளிட்டோர் திமுக வேட்பாளர் செல்வராஜை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.   தமிழகத்தில் புதிய விடியலை காண திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவை தெரிவிக்கிறோம். சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் திமுக அணிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். மதவாத சக்திகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். தமிழகம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சியில் செல்வச் செழிப்பு காண வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை வேட்பாளர் செல்வராஜ், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பாளையக்காடு, பூச்சக்காடு, தெற்கு தோட்டம், வெடத்தலாங்காடு, கரைத்தோட்டம், ஏபிடி ரோடு, மங்கலம் ரோடு, வெங்கடாசலபுரம் வீதி, மாகாளியம்மன் கோவில் தெரு, தாடிக்கார முக்கு, ஆலங்காடு ஆகிய பகுதிகளில், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று, திமுக வின் தேர்தல் அறிக்கைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags : Christian ,DMK ,Selvaraj ,
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்