தேசிய ஜூனியர் கபடி வீரர்களுக்கு பாராட்டு

திருப்பூர், ஏப்.2: தெலுங்கானாவில் தேசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் தமிழக சிறுவர் அணி மூன்றாமிடம் பெற்றது. சிறுமியர் அணி கால் இறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது. தமிழக சிறுவர் அணியில் திருப்பூரை சேர்ந்த சக்திவேல் (டால்பின் அணி), ஸ்ரீ பாலாஜி (பீனிக்ஸ் அணி), இருவர் பங்கேற்றனர். சிறுமியர் அணியில் ஆனைமலை வி.ஆர்.டி. மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி சுதிஜாபீவி இடம் பெற்றனர். இந்த வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா கபடி கழக அலுவலகத்தில் கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமையில் நடந்தது.  மாவட்ட செயலாளர் சண்முகம், பொருளாளர் ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அணியில் இடம் பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவி சுதிஜாபீவியின் பிளஸ் 2 படிப்புக்கு ஆகும் செலவை மாவட்ட கபடி கழக புரவலர் வேலுச்சாமி ஏற்றுக்கொண்டார். இணை செயலாளர் வாலீசன் நன்றி கூறினார். வளர்ச்சிக் குழு தலைவர் ராஜூ, மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் தம்பி சண்முகம், நடுவர் குழு கன்வீனர் சேகர், இணை செயலாளர் தண்டபாணி, பயிற்சியாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>