சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

அவிநாசி, ஏப் 2: சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (31). இவர் அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், நாகராஜ் மீது, குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, மாவட்ட போலீஸ் எஸ்பி. திஷாமிட்டல் பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில்,  நாகராஜ் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு செ ய்யப்பட்டு அதற்கான நகலை சிறை அதிகாரிகளிடம் வழங்கபட்டுள்ளது.

Related Stories:

More