×

நீலகிரியில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு

ஊட்டி, ஏப். 2:  நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி சட்டமன்ற தொகுதி வாரியாக காவல்துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஊட்டியில் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் என்ற விகிதத்தில் 3472 அலுவலர்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 696 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 4168 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள்.

112 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்டீரிமிங் மற்றும் நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் 868 வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்டீரிமிங், மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 400 காவல்துறையினர், 112 நுண் பார்வையாளர்கள் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கூடலூர் தொகுதி பொது பார்வையாளர் ராகுல் திவாரி, காவல்துறை பார்வையாளர் ரஞ்சித்குமார் மிஷ்ரா, மாவட்ட எஸ்பி. பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்