நெல்லியாளம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

பந்தலூர், ஏப்.2: பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் நெல்லியாளம் நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. நெல்லியாளம் நகராட்சி பகுதியில் 21 வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளை ஏலமன்னா பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி சார்பில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று திடீரென குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. நெல்லியாளம் நகராட்சி ஆணையர் லீணாசைமன்  கூடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

>