சுந்தராபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு

கோவை, ஏப். 2:  கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தோட்டத்தில் பகுதியில் வசிக்கும் நபர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்பு சுந்தராபுரம் ராமலிங்க நகர் மற்றும் அரசன் தியேட்டர் பின்புறம் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது, ‘‘குறிச்சி பகுதியில் நகர்மன்ற தலைவராக இரண்டு முறை இருந்துள்ளேன். அப்போது செய்த நிலத்திட்டங்களை காட்டிலும் தற்போது எம்எல்ஏயானால் அதிக அளவில் நலத்திட்டங்கள் செய்ய முடியும். திமுக ஆட்சி அமைந்ததும் கிணத்துக்கடவு தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும். 100 நாட்களில் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்றார்.

கோவை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் தலைமையில் குறிச்சி பேருந்து நிலையம், பொள்ளாச்சி மெயின் ரோடு பேக்கரி கடைகள், பொது மக்களிடம் இளைஞரணியினர் வாக்கு சேகரித்தார்கள். குறிச்சி சரவணன், அக்பர் அலி, திராவிட செல்வன், குணாநிதி பிரபு, விஜய் ஆனந்த், முத்து கார்த்தி உடனிருந்தனர். இந்நிகழ்வுகளில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி,  ஒன்றிய செயலாளர் ஈபி. ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: