×

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது அதிமுக அரசுதான்

கோவை, ஏப் 2: அதிமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக உள்ளது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். கோவை  தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி, நேற்று குனியமுத்தூர், சுகுணாபுரம், நரசிம்மபுரம்,  இடையர்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக  சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தொண்டாமுத்தூர்  தொகுதி மக்களுக்காக என்றும் பாடுபடக்கூடியவன் நான். இந்த தொகுதியில்,  ஏராளமான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இந்துக்கள் வசிக்கின்றனர். இவர்கள்  எல்லோரும் அண்ணன்-தம்பியாக பழகுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இங்கு   எந்தவித கலவரமும் நடக்கவில்லை. அந்த அளவுக்கு நாம் சகோதரர்களாக பழகி  வருகிறோம். தமிழகத்திலும் எந்த பகுதியிலும் கலவரம் நடக்கவில்லை. சிறப்பான  ஆட்சி நடந்து வருகிறது. நாங்கள், எந்த காலக்கட்டத்திலும் சிறுபான்மை  மக்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது.  அதிமுக ஆட்சியில்தான் சிறுபான்மை  மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த தொகுதியில் பல்வேறு  வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அந்த உரிமையில்தான்  உங்களிடம் மீண்டும் வாக்கு கேட்டு வந்துள்ளேன். முன்பு, பாலக்காடு சாலையில்  அதிகளவில் விபத்து நடந்தது. தற்போது இந்த சாலை அகலப்படுத்தப்பட்டு,  விபத்து குறைந்துள்ளது. இதேபோல், கோவையில் பல முக்கிய சாலைகள்  அகலப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், 80 சதவீதம் சாலை விபத்து குறைந்துள்ளது.  

தொண்டாமுத்தூர் தொகுதியை மேம்படுத்தப்பட்ட தொகுதியாக  மாற்றியுள்ளேன். ஸ்மார்ட்சிட்டி திட்டம், கூட்டுக்குடிநீர் திட்டம்,  மேம்பாலங்கள், ஒருங்கிணைந்த பஸ் நிலையம் என எண்ணற்ற பணிகளை கோவைக்கு  செய்துள்ளோம். மெட்ரோ ரயில் திட்டமும் விரைவில் வர உள்ளது. நீண்டகால  பிரச்சனையான விமான நிலைய விரிவாக்க பணியை தற்போது துவக்கி விட்டோம்.  கூடுதல் ஐ.டி. பார்க் கட்டுமான பணி துவங்கியுள்ளது. ராணுவ தளவாட பூங்காவும்  கோவையில் அமைய உள்ளது. இதன்மூலம், பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற  உள்ளனர்.  குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு, மக்களுக்கு தடையின்றி  குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம். வாக்களித்த மக்களை ஏமாற்றாமல்,  மனசாட்சியுடன் பணி செய்து கொடுத்துள்ளோம். தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு  தாருங்கள். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். இதன்பின்னர், சுகுணாபுரம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து அவரது மகள் சாரங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை-நாகர்கோவில் ரயில் மதுரை-நாகர்கோவில் இடையே 13ம் தேதி வரை ரத்து

கோவை, ஏப்.2: கோவை-நாகர்கோவில் ரயில், மதுரை-நாகர்கோவில் இடையே வரும் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மதுரை அருகே திருமங்கலம்,  துலுக்கப்பட்டி இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - நாகர்கோவில் மார்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே கடந்த மார்ச் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை மதுரை-நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பராமரிப்பு பணிகள்  முடிவடையாததால், கோவை- நாகர்கோயில் அதிவிரைவு ரயில் மற்றும் நாகர்கோவில்-கோவை அதிவிரைவு ரயில் வரும் 13ம் தேதி வரை  நாகர்கோவில்-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், 13ம் தேதி வரை கோவை-நாகர்கோவில் ரயில், கோவை-மதுரை இடையே மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில்-கோவை ரயில், மதுரை-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : AIADMK government ,
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...