×

கோவையில் அதிக திட்டங்கள் நிைறவேற்றப்பட்டுள்ளன

கோவை, ஏப்.2: கோவை மாவட்டத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம் என முதல்வர் எடப்படி பழனிசாமி கூறினார். கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக வெற்றி பெறும் வலிமையான கூட்டணி. நாட்டு நன்மை தரும் கூட்டணி. அதிமுக எம்.ஜி.ஆர் உருவாக்கி தந்த வலிமையான கட்சி. ஜெயலலிதா 100 ஆண்டு கடந்தும் அ.தி.மு.க கட்சியின் ஆட்சி இருக்கவேண்டும் என கூறினார். அவர் கனவை நாம் நிறைவேற்ற பாடுபடவேண்டும். கோவை மாவட்டத்தில் கடந்த முறை 90 சதவீத வெற்றி கிடைத்தது. இந்த முறை 100 சதவீத வெற்றி பெறவேண்டும். கோவை மாவட்டத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். 10 ஆண்டு காலத்தில் அதிக சாதனை பணிகள் செய்யப்பட்டது.

கோவையில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மெட்ரோ ரயில் திட்டம் 6,700 கோடி ரூபாய் செலவில் மேற்ெகாள்ளப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது. விமான நிலைய விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் நடத்தப்படும். விமான நிலையம் விரிவாக்கம் செய்தால் அதிக விமானங்கள் இயக்கமுடியும். தொழில் நிறுவனங்கள் அதிகளவு துவக்கி அதிக தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மேற்கு புறவழிச்சாலை பணி தற்போது நடக்கும் பணிகள் முடிந்ததும் துவக்கப்படும். காந்திபுரம், கணபதி டெக்ஸ்டூல், ஈச்சனாரி, ஆவாரம்பாளைய், காரமடை, போத்தனூர் உள்ளிட்ட பகுதியில் பாலங்கள் கட்டி தந்திருக்கிறோம். மக்கள் கண் முன் பார்க்கும் இந்த திட்டங்களை மறைக்க முடியாது. அவினாசி ரோட்டில் 1,620 கோடி ரூபாய் செலவில் 10 கி.மீ. தூர மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. திருச்சி ரோடு மேம்பாலம், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம், கவுண்டம்பாளையம், ஜி.என். மில்ஸ் பாலம் பணி நடக்கிறது.

50 ஆண்டு கால எதிர்பார்ப்பான அவினாசி அத்திக்கடவு திட்ட பணிகள் 1,652 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. 250 ேகாடி ரூபாய் செலவில் நொய்யல் ஆறு சீரமைப்பு பணி நடக்கிறது. இதுவரை 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். பி.ஏ.பி. புனரமைப்பு திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும். ேகாவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் இந்தியாவில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் என்ற பரிசு பெற்றுள்ளது. பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகராக கோவை தேர்வு பெற்றுள்ளது. கோவை நகரில் 20 ஆயிரம் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக குற்றங்களை தடுக்க கண்காணிப்பு பணி நடக்கிறது. சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மானிய தொகை 25 சதவீதம் என உயர்த்தப்பட்டது. கொப்பரை தேங்காய் 103 ரூபாய் என விலை உயர்த்தி தரப்பட்டது. நீராபானம் அனுமதி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 68 அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டது. 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக கிராம பகுதி ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி இருக்கிறோம். அடுத்த ஆண்டில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க அனுமதிக்கப்பட்டது. இதன் மூலமாக 1,250 பேர் கூடுதலாக மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு உருவாகியுள்ளது. வறட்சி நிவாரணம் வழங்கியது அதிமுக அரசு தான். அவினாசி அத்திகடவு இரண்டாவது திட்டம் துவக்கப்படும். தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் இதில் இணைக்கப்படும். ெபாள்ளாச்சியை தனி மாவட்டமாக்க கோரிக்கை விடப்பட்டது. விரைவில் இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். கோவை அரசு மருத்துவமனையில் 290 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டி தரப்பட்டது. 168 கோடி ரூபாய் செலவில் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடக்கிறது. கோவையில் 6 புதிய கல்லூரிகள் கட்டி தரப்பட்டது.

செங்கல் சூளைகளின் பிரச்னை அதிமுக அரசு அமைந்ததும் சரி செய்து தரப்படும். கோவையில் கிரிக்கெட் அரங்கம் அமைக்கப்படும். மின்னணு சாதனங்களுக்கான ெதாழில்பேட்டை உருவாக்கி தரப்படும். ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் துவக்கப்படும். ஏற்கனவே மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு அதிக நன்மைகள் செய்து தரப்பட்டது. ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு 6 கோடி ரூபாயாக இருந்த நிதி 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. 15 கோடி ரூபாய் செலவில் ஹஜ் பயணிகள் தங்கும் கட்டடம் சென்னையில் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7 ஆயிரம் கோயில்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக வேட்பாளர்களான சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ஜூனன், கந்தசாமி, செல்வராஜ், அமுல்கந்தசாமி, ஜெயராம், பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாக்ஸ் செய்தி 200 ரூபாய் கூலி, 100 ரூபாய் கமிஷன்
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட வேன், பஸ்களில் பிரசார கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வந்தார்கள். போதுமான கூட்டம் சேரவில்லை. வந்தவர்களும், முதல்வர் பேச்சை கேட்காமல் ஆங்காங்கே மர நிழலில் நின்று கொண்டிருந்தனர். போலீசார் பேச்சை கேட்க அருகே செல்லுமாறு கூறினர். ஆனால் கடும் வெயிலில் நின்று முதல்வரின் பேச்சை கேட்க பலர் விரும்பவில்லை. வாகனங்களில் அழைத்து வந்தவர்களுக்கு 200 ரூபாய் கூலி வழங்கப்பட்டது. அழைத்து வந்த கட்சி நிர்வாகிகள் ஆளுக்கு 100 ரூபாய் என கமிஷன் எடுத்து கொண்டதாக கூறி புலம்பி சென்றனர்.

பேச பேச போயிட்டாங்க
முதல்வர் பேச துவங்கியதும் கூலிக்காக வந்த ெதாண்டர்கள் பலர் கிளம்பி விட்டனர். போலீசார் மெயின் ரோடு கடந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் சிலர் வாக்குவாதம் செய்தனர். மைதானத்தில் கூட்டம் குவியும் என போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் கூட்டமின்றி மைதானத்தின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மைதானம் காத்து வாங்கியதை பார்த்து வேட்பாளர்களும் விரக்தியடைந்தனர்.

Tags : Coimbatore ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்