100 வாக்குறுதிகளை எடுத்துக்கூறி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பிரசாரம்

கரூர், ஏப்.2: கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கடந்த 15 நாட்களாக கரூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு முதற்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்து, நேற்று இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அறிவிக்கப்பட்டார். கடந்த 15தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், அதற்கு முன்னதாகவே, கோடங்கிப்பட்டியில் பட்டாளம்மன், முத்தாலம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை மேற்கொண்டார்.கருர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகள், தொகுதியில் உள்ள 12 ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு, அந்தந்த பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு உடன் சென்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் வெங்கமேட்டில், மணல் மாட்டு வண்டி உரிமையாளர்களுடன் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் தொடர்ந்து தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை துவக்கினார். தொடர் பிரசாரத்துக்கு பிறகு 4ம்தேதி மாலை 7மணி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.பிரசாரத்தின் போது, வாக்காளர்களிடம், திமுகவின் தேர்தல் அறிக்கை, திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கூறிய 7 உறுதிமொழிகள் போன்றவற்றை எடுத்துக் கூறி வாக்குச்சேகரித்த அவர், ஐந்தாண்டுகளில் கரூர் தொகுதியில் தான் நிறைவேற்றவுள்ள 100 வாக்குறுதிகளையும் பேசி மக்களிடையே வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>