×

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜ வேட்பாளரை கண்காணிப்பதில் பாரபட்சம் காட்டும் அதிகாரிகள் திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

கரூர், ஏப். 2: மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நான் நிச்சயம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.இதேபோல், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் பின்னால் 2 வாகனங்கள் மட்டுமே செல்கிறது. ஆனால், பாஜக வேட்பாளர் பின்னால் 30 வாகனங்கள் செல்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. பாஜக வேட்பாளருக்காக பிற மாநிலம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அவர்கள் அனைவரும் இறுதி கட்ட பிரசாரம் முடிவடைந்ததும் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூர் தொகுதியில் நான் பிரசாரம் மேற்கொள்ளும் போது, பறக்கும் படை அதிகாரிகள் உட்பட இரண்டு குழுவினர் உடன் வந்து படம் பிடிக்கின்றனர். ஆனால், ஆளுங்கட்சி வேட்பாளர் குறித்து யாரும் கண்டு கொள்வதில்லை. தேர்தல் செலவு கணக்குகளில் கூட எதிர்க் கட்சிக்கு ஒரு மாதிரியும், ஆளுங்கட்சிக்கு ஒரு மாதிரியும் கணக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம் என்றார்.

Tags : DMK ,BJP ,Aravakurichi ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...