×

மயிலாடுதுறை தொகுதியில் குப்பையால் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு

மயிலாடுதுறை, ஏப். 2: மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி, மயிலாடுதுறை நகரில் வாக்கு சேகரித்தார்.மூங்கில் தோட்டம் பகுதியில் சித்தமல்லி பழனிச்சாமி பேசுகையில், மயிலாடுதுறையில் உள்ள 36 வார்டுகளிலும் தினம்தோறும் 32 டன் குப்பை சேர்கிறது. மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைக்கு அடுத்தபடியாக குப்பை பிரச்னை தலைதூக்கி மக்களை வாட்டி வதைக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வாக வயல்வெளி பகுதிகளில் குப்பை கிடங்குக்காக தனி இடம் வாங்கப்பட்டு அங்கே நவீன வசதிகளுடன் குப்பைகளை உரமாக்கும் பணி துவக்கப்படும் என்றார். அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில், அதிமுக நகர செயலாளர் நாஞ்சில் கார்த்தி, முன்னாள் நகர செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அலி, பாஜக மோடிக்கண்ணன் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் பொதுமக்களிடம் கத்தியை...